பேளூர்

    அமைவிடம் - பேளூர்
    ஊர் - கல்வராயன் மலை
    வட்டம் - கல்வராயன் மலை
    மாவட்டம் - கள்ளக்குறிச்சி
    வகை - குத்துக்கல்/கல்வட்டங்கள்
    கிடைத்த தொல்பொருட்கள் - கல்வட்டங்கள், குத்துக்கல்
    பண்பாட்டுக் காலம் - பெருங்கற்காலம்
    கண்டறிந்த நிறுவனம்/நபர் -

    மத்தியத் தொல்லியல் துறை

    விளக்கம் -

    பேளூர் பகுதியில் ஏராளமான வரலாற்றுச் சின்னங்கள் காணப்படுகின்றன. நடுகற்கள், குத்துக்கற்கள், கல்வட்டங்கள் ஆகியன குறிப்பிடத்தக்கன. இங்கு பெரும் பரப்பளவில் இருந்திருந்த பெருங்கற்காலப் பண்பாடானது சிதைந்த நிலையில் காணப்படுகிறது. பலகைக் கல்வெட்டுகள் ஆங்காங்கே நிலப்பரப்பில் ஊன்றப்பட்டு வழிபாட்டில் உள்ளது.

    ஒளிப்படம்எடுத்தவர் - திரு.வேலுதரன்
    ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர் - தமிழ் இணையக் கல்விக்கழகம்
    சுருக்கம் -

    கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கல்வராயன்மலைப்பகுதியில் அமைந்துள்ளபேளூர் என்னும் ஊரில் பெருங்கற்கால ஈமச்சின்னங்கள் ஆங்காங்கே காணப்படுகின்றன. கற்குவியல், குத்துக்கல் ஆகியவை அவற்றில் குறிப்பிடத்தக்கவை. இங்கு காணப்படுகின்ற குத்துக்கல் ஒன்று வழிபாட்டில் உள்ளது.