அமைவிடம் | - | மானூத்து |
ஊர் | - | மானூத்து |
வட்டம் | - | உசிலம்பட்டி |
மாவட்டம் | - | மதுரை |
வகை | - | பெருங்கற்காலம் |
கிடைத்த தொல்பொருட்கள் | - | கல்வட்டங்கள், கற்குவை |
பண்பாட்டுக் காலம் | - | பெருங்கற்காலம் |
கண்டறியப்பட்ட காலம் | - | பொ.ஆ.2019 |
கண்டறிந்த நிறுவனம்/நபர் | - | மத்தியத் தொல்லியல் துறை |
விளக்கம் | - | மதுரை மாவட்டத்தில் உசிலம்பட்டி வட்டத்தில் அமைந்துள்ள மானூத்து ஊராட்சியில் பெருங்கற்கால ஈமச்சின்னங்கள் கண்டறியப்பட்டுள்ளன. கல்வட்டங்கள், கற்குவை எனப்படும் கற்குவியல்கள் ஆகிய ஈமச்சின்னங்கள் சிதைந்த நிலையில் பரவலாகக் காணப்படுகின்றன. மேலும் இவ்வூர் மிகப் பழங்காலந்தொட்டு மக்கள் வாழ்ந்த பகுதியாக இருந்திருக்கிறது. அதற்குரிய சான்றுகளாக அவர்கள் வழிபட்டு வந்த தெய்வங்களின் இருப்பிடம், நீர்நிலை ஆதாரங்கள் ஆகியனவும் களஆய்வில் கண்டறியப்பட்டு ஆவணப்படுத்தப்பட்டு உள்ளன. |
ஒளிப்படம்எடுத்தவர் | - | காந்திராஜன் க.த. |
ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர் | - | தமிழ் இணையக் கல்விக் கழகம் |
சுருக்கம் | - | மதுரை மாவட்டத்தில் உள்ள உசிலம்பட்டி வட்டத்தின், உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் மானூத்து அமைந்துள்ளது. மானூத்து ஓர் ஊராட்சி கிராமம் ஆகும். மானூத்து கிராமத்தில் தொல்லியல் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இவ்வூர் ஓரு தொல்லியல் களமாக இருப்பது கண்டறியப்பட்டு ஆவணப்பட்டுள்ளது. மானூத்தில் கல்வட்டங்கள், கற்குவை எனப்படும் கற்குவியல் ஆகிய பெருங்கற்கால ஈமச்சின்னங்கள் சிதைந்த நிலையில் காணப்படுகின்றன. |