முகப்பு சிற்பங்கள் உலோகச் சிற்பங்கள் அப்பர்
சிற்பத்தின் பெயர் | - | அப்பர் |
சிற்பத்தின் அமைவிடம் | - | செப்புத் திருமேனிகள் காட்சிக்கூடம் |
ஊர் | - | வெம்பாவூர் |
வட்டம் | - | பெரம்பலூர் |
மாவட்டம் | - | திருச்சி |
அமைவிடத்தின் பெயர் | - | அரசு மைய அருங்காட்சியகம், சென்னை |
சிற்பத்தின் வகை | - | சைவம் |
அளவுகள் / எடை | - | உயரம் 57 செ.மீ. |
விளக்கம் | - | அரையாடை இடையில் உடுத்திய எளிய மனிதராய் அப்பர் காட்டப்பட்டுள்ளார். பீடத்தின் மீது நின்ற நிலையில் கைகளைக் கூப்பி வணங்கிய நிலையில் உள்ளார். உழவாரப்படை என்னும் திருக்கோயில் புனரமைப்புக் கருவியை தன் கையில் வைத்துள்ளார். |
ஆக்கப் பொருள் | - | உலோகம் |
காலம் / ஆட்சியாளர் | - | கி.பி.12-ஆம் நூற்றாண்டு / இடைக்காலச் சோழர் |
ஒளிப்படம் எடுத்தவர் | - | தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை |
ஒளிப்படம் வழங்கிய நிறுவனம்/ நபர் | - | தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை |
சுருக்கம் | - | தேவார மூவருள் ஒருவரான திருநாவுக்கரசர் தனது பதிகங்களில் சைவத் தத்துவங்களை பதிவு செய்தவர். உழவாரப் பணி என்னும் திருக்கோயில் திருத்தொண்டினை தொடங்கி வைத்தவர். எனவே உழவாரப்படை என்னும் கருவியை எப்போதும் தன் தோள் மீது சார்த்தி வைத்திருப்பவராய் காணப்படுகிறார். அரையாடை இடையுடுத்திய எளியராய், உருத்திராக்க மாலையை தலையிலும், தோளிலும், கழுத்திலும் அணிந்து சைவ அடியாராக காணப்படுகிறார். |
குறிப்புதவிகள் | - |
|