கண்ணப்பர்

சிற்பத்தின் பெயர் - கண்ணப்பர்
சிற்பத்தின் அமைவிடம் - தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோயில்
ஊர் - தாராசுரம்
வட்டம் - கும்பகோணம்
மாவட்டம் - தஞ்சாவூர்
அமைவிடத்தின் பெயர் - கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம்
சிற்பத்தின் வகை - சைவம்
விளக்கம் - கலைமலிந்த சீர்நம்பி கண்ணப்பர்
ஆக்கப் பொருள் - கருங்கல்
காலம் / ஆட்சியாளர் - கி.பி.12-ஆம் நூற்றாண்டு/இரண்டாம் இராஜராஜன்
ஒளிப்படம் எடுத்தவர் - காந்திராஜன் க.த.
சுருக்கம் - திருக்காளத்தி மலையில் வேடர் குலத்தில் பிறந்த திண்ணனார் அன்பினால் இறைவனின் அடியவராய் அருகில் நிற்கும் அனுமதி பெற்றவர். தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோயிலில் காணப்படும் கண்ணப்பர் தனிச் சிற்பம் இரு கைகளையும் குவித்து வணங்கிய நிலையில் வடிக்கப்பட்டுள்ளது. கண்ணப்பர் வேடுவராதலால் கால்களில் செருப்பணிந்தும், அரையில் தோலாடை உடுத்தியும், இடது தோளில் சாத்தப்பட் வில்லுடனும், முதுகில் அம்புகள் உள்ள அம்பறாத்தூணியுடனும் உள்ளார். அடியவர் தன் காதுகளில் பத்ர குண்டலங்களும், கைகள், கைழுத்தில் உருத்திராக்கத்திலான அணிகளும் அணிந்துள்ளார். கண்ணப்பர் தாடி, மீசையுடன் காணப்படுகிறார்.
குறிப்புதவிகள் -

  1. வை. கணபதி ஸ்தபதி, ‘சிற்பச் செந்நூல்’, மாமல்லபுரம் கலைக் கல்லூரி, மாமல்லபுரம், 1978. 
  2. T. A. Gopinatha Rao, ‘Elements of Hindu Iconography’, The Law Printing House, Mount Road, Madras, 1914. 
  3. P.R. Srinivasan, ‘Bronzes Of South Indian’, Government Museum, Chennai, 1994. 
  4. .ஆசனபதம் 
  5. உக்கிரபீடம் 
  6. உபபீடகம் 
  7. தண்டிலம் 
  8. பரமசாயிகம் 
  9. மகாபீடபதம் 
  10. மண்டூகம் 
  11. மயமதம் 
  12. மானசாரம் 
  13. வாசுத்து சூத்திர உபநிடதம் 
  14. ஸ்ரீதத்வநிதி 
  15. அனுபோக பிரசன்ன ஆரூடம் 
  16. அருட் கொடி சிற்பசாஸ்திரக் கண்ணாடி 
  17. காக்கையர் சிற்பம் புசண்டர் சல்லியம் 
  18. சர்வார்த்த சிற்ப சிந்தாமணி.