முகப்பு சிற்பங்கள் கற்சிற்பங்கள் பரசுராமர்
சிற்பத்தின் பெயர் | - | பரசுராமர் |
சிற்பத்தின் அமைவிடம் | - | மைய அருங்காட்சியகம், சென்னை |
சிற்பத்தின் வகை | - | வைணவம் |
அளவுகள் / எடை | - | 41X14 செ.மீ |
விளக்கம் | - | பரசுராமர் சமபாதத்தில் நின்றுள்ளார். வலது கையில் தண்டத்தைப் பிடித்துள்ளார். இடது கையை தொடையில் ஊரு முத்திரையாக வைத்துள்ளார். கணுக்கால் வரை நீண்ட ஆடை அணிந்துள்ளார். ஜடாமகுடம் தரித்துள்ளார். கழுத்தில் கண்டிகை, சரப்பளி, மார்பில் முப்புரிநூல் ஸ்தனசூத்திரம், உரஸ் சூத்திரம் மற்றும் பிறவணிகள் அணிந்துள்ளார். வயிற்றில் உதரபந்தம் காட்டப்பட்டுள்ளது. |
ஆக்கப் பொருள் | - | கருங்கல் |
ஒளிப்படம் எடுத்தவர் | - | திரு.சுந்தர்ராஜ், பரிவாதினி ஸ்டுடியோ, சென்னை. |
ஒளிப்படம் வழங்கிய நிறுவனம்/ நபர் | - | தமிழ் இணையக் கல்விக் கழகம் |
சுருக்கம் | - | தேசிய மைய அருங்காட்சியகம் சென்னை எழும்பூரில் அமைந்துள்ளது. இங்கு தமிழ்நாட்டு மற்றும் இந்தியப் பகுதிகளில் இருந்து வந்த பழமையான தொல்பொருட்கள், கலைவடிவங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றுள் குறிப்பிடத்தக்கவைகளாக சிற்பங்களைக் கூறலாம். பல காலகட்டங்களைச் சேர்ந்த அரசுகளின் கலைப்பாணியில் வடிவமைக்கப்பட்ட சிற்பங்கள் இங்கு பாதுகாக்கப்பட்டுள்ளன. கல், மரம், உலோகம், சுதை போன்ற மூலப்பொருட்களால் ஆக்கப்பட்ட சமயம், வாழ்வியல், கலை மற்றும் பொது வடிவங்கள் சிற்பங்களாக உள்ளன. சிவ வடிவங்கள், விஷ்ணு உருவங்கள், சமண தீர்த்தங்கரர்கள், புத்தர், முருகன், கணபதி, ஜேஷ்டா, மகிஷாசுரமர்த்தினி போன்ற சிற்பங்கள் குறிப்பிடத்தக்கவை. அவை எண்ணிக்கையிலும் அதிகம் காணப்படுகின்றன. கலைப்பொருட்களாக பாதுகாக்கப்பட்டுள்ள சிற்பங்கள் கலை, புராணம், சமயம், பண்டைய சமூகம், பண்பாடு, பொருளாதாரம் ஆகியவற்றின் வரலாறு அறிய மிகவும் உதவியாய் இருக்கின்றன. |
குறிப்புதவிகள் | - |
|