தமிழ்

          தமிழ்நாட்டில் உள்ள கல்வெட்டுகளில் 90 விழுக்காடு கல்வெட்டுகள் தமிழ் எழுத்துகளிலேயே பொறிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தின் மொழி, பண்பாடு, சமூகம், அரசியல், கொடை, வழிபாடு, பொருளாதாரம், வேளாண்மை  ஆகியவற்றைக் காட்டும் காலக் கண்ணாடியாக தமிழ்க் கல்வெட்டுகள் விளங்குகின்றன. தமிழ்க் கல்வெட்டுகளின் வளர்ச்சி கட்ட நிலையாக சோழர்கள் காலத்தைக் குறிப்பிடலாம். தமிழ் எழுத்துகளின் சீரிய வரி வடிவம் பெற்றது இக்காலத்தில் தான். மிக நீண்ட வரிகளையுடைய தொடர்க் கல்வெட்டுகள் கோயில்களில் காணப்படுகின்றன. அக்கல்வெட்டுகள் அக்கோயிலுக்கான நிர்வாகம், வழிபாடு, கொடை, வேளாண்மை, அரச ஆணை ஆகிய செய்திகளைக் கொண்டனவாக அமைந்துள்ளன. தமிழக வரலாற்றின் ஊற்றுக்கண் தமிழ்க் கல்வெட்டுகளிலேயே அமைந்துள்ளது.

மேலும் படிக்க