முகப்பு கல்வெட்டுகள் கிரந்தம் பெரியபொம்மட்டி
அமைவிடம் | - | பெரியபொம்மட்டி |
ஊர் | - | பெரியபொம்மட்டி |
வட்டம் | - | ஊத்தங்கரை |
மாவட்டம் | - | கிருஷ்ணகிரி |
மொழியும் எழுத்தும் | - | தமிழ்-கிரந்தமும் தமிழும் |
காலம் / ஆட்சியாளர் | - | நுளம்பர் / வீரநுளம்பன் |
வரலாற்றுஆண்டு் | - | கி.பி.9-10 ஆம் நூற்றாண்டு |
கல்வெட்டு மின்னுருவாக்கப்பட்டது / சேகரிக்கப்பட்டது | - | தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை |
சுருக்கம் | - | வீரன் வலக்கையில் வாளும் இடக்கையில் கேடயமும் வைத்துள்ளான். கழுத்திலும் மார்பிலும் அம்புகள் தைத்துள்ளன. இடையில் குறுவாள் உள்ளது. கைகளில் தொள்வளைகளும், இடையில் இடைக்கச்சையும், கழுத்தில் அணிகளும் காணப்படுகின்றன. விரைந்து செல்கின்ற தோற்றமுடைய இவ்வீரனின் இருகால்களின் கீழும் ஒவ்வொரு தலைகள் உள்ளன. வீரனின் வலப்புறம் இருமாடுகள் காணப்படுகின்றன. இந்நடுகல்லில் வீரனின் உருவம் அளவில் மிகப்பெரியதாக உள்ளது. வீரநுளம்பனது பதினைந்தாம் ஆட்சி ஆண்டில் சேவத்தூரை ஆண்ட மாமண்டைய்யன் என்பவன் தொறுக்கொண்டபோது அத்தொறு வினைமீட்டு, நடுகல்லில் உள்ள வீரன் தன்னடியாருடன் மாண்டதை இது குறிக்கிறது. |
குறிப்புதவிகள் | - | செங்கம் நடுகற்கள், 1972, தமிழ்நாடு தொல்லியல் துறை வெளியீடு, 2. தருமபுரி கல்வெட்டுகள், 1975, தமிழ்நாடு தொல்லியல் துறை வெளியீடு, 3. தொல்குடி-வேளிர்-அரசியல், (செங்கம் நடுகற்கள்-ஓர் ஆய்வு) ர.பூங்குன்றன், 2017, ஹெரிடேஜ் ட்ரெசர்ஸ் பப்ளிஷர்ஸ், சென்னை. 4. நடுகல் கல்வெட்டுகள், ர.பூங்குன்றன், 2017, ஹெரிடேஜ் ட்ரெசர்ஸ் பப்ளிஷர்ஸ், சென்னை. 5. நடுகற்கள், ச. கிருஷ்ணமூர்த்தி 2004,மெய்யப்பன் பதிப்பகம் வெளியீடு. |