அய்யனார்குளம்

அமைவிடம் - மன்னார் கோயில்
ஊர் - அய்யனார்குளம்
வட்டம் - அம்பாசமுத்திரம்
மாவட்டம் - திருநெல்வேலி
மொழியும் எழுத்தும் - தமிழ் - பண்டையத் தமிழி (தமிழ்-பிராமி)
வரலாற்றுஆண்டு் - கி.பி.2-ஆம் நூற்றாண்டு
கல்வெட்டு பதிக்கப்பெற்ற ஆவணம் - Early Tamil Epigraphy - I.Mahadevan, தமிழ்-பிராமி கல்வெட்டுகள் - தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை
கல்வெட்டு மின்னுருவாக்கப்பட்டது / சேகரிக்கப்பட்டது - தமிழ் இணையக் கல்விக்கழகம்
சுருக்கம் -

இராசாப்பாறையில் இயற்கையாய் அமைந்த குகைத்தளத்தின் முகப்பு நெற்றிப்பகுதியில் நீர்வடி விளிம்பு வெட்டப்பட்டு உள்ளே இரு கற்படுக்கைகளும் அமைக்கப்பட்டுள்ளன. இதன் உட்கூரைப் பகுதியில் 3 வரிகளில் இக்கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது. இதன் காலம் சுமார் கி.பி. இரண்டாம் நூற்றாண்டாகும். ”பள்ளி செய்வித்தான் கடிகை (கோ) வின் மகன் பெருங்கூற்றன்“ என்பது கல்வெட்டு வாசகமாகும். கோ என்ற எழுத்து ஊகிக்கப்பட்டதாகும். கடிகை கோவின் மகன் பெருங்கூற்றன் என்பவன் பள்ளி செய்வித்தான் என்று பொருள்படும்.

குறிப்புதவிகள் - I.Mahadevan, Early Tamil Epigraphy , உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை, தி.ஸ்ரீ.ஸ்ரீதர் (பதி.ஆ) தமிழ்-பிராமி கல்வெட்டுகள், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சென்னை