அரசலாபுரம்

அமைவிடம் - அரசலாபுரம்
ஊர் - அரசலாபுரம்
வட்டம் - விக்கிரவாண்டி
மாவட்டம் - விழுப்புரம்
மொழியும் எழுத்தும் - தமிழ் - வட்டெழுத்து
வரலாற்றுஆண்டு் - கி.பி.4-ஆம் நூற்றாண்டு
கல்வெட்டு பதிக்கப்பெற்ற ஆவணம் - Early Tamil Epigraphy - I.Mahadevan, தமிழ்-பிராமி கல்வெட்டுகள் - தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை
சுருக்கம் -

கி.பி., 4ம் நுாற்றாண்டை சேர்ந்த வட்டெழுத்துக் கல்வெட்டுடன் கூடிய கோழி நடுகல் விழுப்புரம் மாவட்டம், அரசலாபுரம் கிராமத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது இக்கல்வெட்டு பொதுப்பணித்துறை அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது. இக்கல்வெட்டுப் பலகையில், நின்ற நிலையில் கம்பீரமான தோற்றத்தில், 62 செ.மீ., உயரம், 55 செ.மீ., அகலம் கொண்டதாக சேவல் உருவம் புடைப்புச் சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது. ஆனால் கல்வெட்டில் கோழி என்று குறிப்பிடப்படுகிறது. கோழி உருவத்திற்கு மேல், தமிழ் மொழி வட்டெழுத்தில் இரண்டு வரிகளிலும், கீழ்ப்பகுதியில் ஒரு வரியும் எழுதப்பட்டுள்ளது. இக்கல்வெட்டில் , முகையூரு மேற்சே, ரிகு யாடிக, ருகிய கோழி என மூன்று வரிகளாக கல்வெட்டு பிரித்து குறிப்பிட்டுள்ளது. இதற்கு, முகையூர் என்ற ஊரின் மேற்சேரியில் நடந்த சேவல் சண்டையில், இறந்துபட்ட சேவல் என்பது பொருள். போரில் இறந்த வீரர்களுக்கு மட்டுமின்றி, நாய், கோழி ஆகிய உயிரினங்களுக்கும் நடுகல் எடுத்துள்ள தொன்மைச் சிறப்பினை இதன்மூலம் அறியமுடிகிறது.

குறிப்புதவிகள் - I.Mahadevan, Early Tamil Epigraphy , உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை, தி.ஸ்ரீ.ஸ்ரீதர் (பதி.ஆ) தமிழ்-பிராமி கல்வெட்டுகள், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சென்னை