அரிக்கமேடு

    அகழாய்விடத்தின் பெயர் - அரிக்கமேடு
    ஊர் - அரிக்கமேடு
    வட்டம் - அரியாங்குப்பம்
    மாவட்டம் - புதுச்சேரி
    வகை - வரலாற்றுக்காலம்
    அகழாய்வு மேற்கொள்ளப்பட்ட காலம் - மார்டிமர் வீலர் [1945], மேரி கஸால் [1947 – 1950], மற்றும் விமலா பெக்லி [ 1989 – 1992] 
    அகழாய்வு தொல்பொருட்கள் - மட்கலன்கள், மணி வகைகள், அணிகலன்கள், கண்ணாடிப் பொருட்கள், நாணயங்கள், உறைகிணறுகள், சாயத்தொட்டிகள், விளையாட்டுப் பொருட்கள் மற்றும் விளக்குகள் ஆகியவை கண்டெடுக்கப்பட்டுள்ளன. விமலா பெக்லி தலைமை யில் நடந்த ஆய்வில் சங்கு வளையல்கள், காதணிகள், வண்ணம் தீட்டப் பயன்படும் குச்சிகள், மரச்சீப்பு, சுடுமண் விலங்கு பொம்மைகள், நீலக் கண்ணாடிக் கோப்பைத் துண்டுகள், தமிழ் பிராமி எழுத்து பொறிக்கப்பட்ட பானை ஓடுகள், ஆம்போரா சாடி 
    அகழாய்வு மேற்கொண்ட நிறுவனம்/ நபர் - இந்தியத் தொல்லியல் துறை
    விளக்கம் -

              அரிக்கமேடு அகழ்வாய்வுகள் வெளிப்படுத்திய கட்டடப் பகுதிகளுக்குள் முக்கியமானது, அதன் பண்டக சாலை. செவ்வக வடிவம்கொண்ட இந்தப் பண்டகசலை, பெரிய செங்கற்களால் கட்டப்பட்டுள்ளது. பண்டக சாலை ஆற்றங்கரையை நோக்கி இருக்கும்படி கட்டப்பட்டு இருக்கிறது. அதுபோலவே, துணிகளுக்கு சாயமிடும் சாயப் பட்டறைகளும், தொட்டிகளும் அரிக்கமேட்டில் இருந்திருக்கின்றன. அவற்றில் இருந்து கழிவு நீர் வெளியேறிச் செல்வதற்கு வசதியாக சிறு வாய்க்கால்கள் தனியே அமைக்கப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த கட்டுமானப் பணிகள் சிந்துச் சமவெளி நாகரிகத்தின் மறுபக்கம் போலவே இருக்கிறது. சங்குக் கண்ணாடி ரத்தினக் கற்கள், படிகக் கற்கள் ஆகியவை அரிக்கமேட்டில் கிடைத்துள்ளன. இதைக் கருத்தில்கொள்ளும்போது, அங்கே மணி உருவாக்கும் தொழிற்சாலை இருந்திருக்கலாம் என்று தோன்றுகிறது. முற்றுப்பெறாத சங்கு வளையல்கள் அரிக்கமேட்டுப் பகுதியில் அதிகம் கிடைத்துள்ளன. சிறிய சங்குகளை அறுத்து காதணிகள் செய்திருக்கின்றனர்.  தாமிரத்தால் செய்யப்பட்ட கிலுகிலுப்பை, குழவிக்கற்கள், முதுமக்கள் தாழி, மரச்சுத்தி எனப் பல்வேறு அரிய பொருட்கள் அரிக்கமேடு ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

    ஒளிப்படம்எடுத்தவர் - தமிழ்நாடு அரசுத் தொல்லியல் துறை
    ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர் - தமிழ்நாடு அரசுத் தொல்லியல் துறை
    சுருக்கம் -

              1941 முதல் 1992 வரை அரிக்க மேட்டில் செய்த பல்வேறு அகழ் வாய்வுகளில் மட்கலன்கள், மணி வகைகள், அணிகலன்கள், கண்ணாடிப் பொருட்கள், நாணயங்கள், உறைகிணறுகள், சாயத்தொட்டிகள், விளையாட்டுப் பொருட்கள் மற்றும் விளக்குகள் ஆகியவை கண்டெடுக்கப்பட்டுள்ளன. விமலா பெக்லி தலைமை யில் நடந்த ஆய்வில் சங்கு வளையல்கள், காதணிகள், வண்ணம் தீட்டப் பயன்படும் குச்சிகள், மரச்சீப்பு, சுடுமண் விலங்கு பொம்மைகள், நீலக் கண்ணாடிக் கோப்பைத் துண்டுகள், தமிழ் பிராமி எழுத்து பொறிக்கப்பட்ட பானை ஓடுகள், ஆம்போரா சாடி போன்றவை கிடைத்துள்ளன. பண்டைய காலங்களில் மத்தியத் தரைக்கடல் நாடுகளில் மது, ஆலிவ் எண்ணெய் போன்றவற்றை சேமித்துவைக்க ஆம்போரா ஜாடிகளைப் பயன்படுத்துவர். இந்த ஜாடிகளை ரோமானியர்கள் தமிழகத்துக்குக் கொண்டுவந்திருக்கின்றனர். இது, மென்மையான களிமண்ணால் வனையப்பட்டு, பழுப்பு நிறத்திலும் இளஞ்சிவப்பு நிறத்திலும் காணப்படும்.