முகப்பு அகழாய்வுகள் வரலாற்றுக்காலம் ஆனைமலை
அகழாய்விடத்தின் பெயர் | - | ஆனைமலை |
ஊர் | - | மானம்போழி |
வட்டம் | - | ஆனைமலை |
மாவட்டம் | - | கோயம்புத்தூர் |
வகை | - | பெருங்கற்காலம் |
காலம் | - | கி.மு.1000 முதல் கி.பி.300 வரை |
அகழாய்வு மேற்கொள்ளப்பட்ட காலம் | - | 1970 |
அகழாய்வு தொல்பொருட்கள் | - | கத்தியின் கூர்முனை, கருப்பு நிறப் பானையோடுகள், சிவப்பு நிற பானையோடுகள், பெருங்கற்கால ஈமப்பானையோடுகள் |
அகழாய்வு மேற்கொண்ட நிறுவனம்/ நபர் | - | தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை |
விளக்கம் | - | ஆனைமலை, மானம்போழி பகுதியில் அமைந்திருந்த பெருங்கற்கால கற்பதுக்கை அகழாய்வு செய்யப்பட்டது. இவ்வகழாய்வில் கத்தியின் கூர்முனைப் பகுதி, கருப்பு பானையோடுகள், சிவப்பு பானையோடுகள் ஆகியன தொல்பொருட்களாக கிடைத்துள்ளன. இவை ஈமச்சின்னத்தில் வைக்கப்பட்ட தொல்பொருட்களாகும். இதன்மூலம் பெருங்கற்கால ஈமச்சின்ன வகைகளுள் ஒன்றான கற்பதுக்கையின் அமைப்பையும், இறந்தவர்களுக்கு பதுக்கையில் வைக்கப்படும் கத்தி, மற்றும் ஈமக்கலன்களைப் பற்றியும் அறியமுடிகின்றது. |
ஒளிப்படம்எடுத்தவர் | - | தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை |
ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர் | - | தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை |
சுருக்கம் | - | கோயம்புத்தூர் மாவட்டம், ஆனைமலை கிராமத்தில் மானம்போழி என்ற பகுதியில் அமைந்திருந்த கற்பதுக்கையில் மாதிரி அகழாய்வு தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையால் 1970-ஆம் ஆண்டு நடத்தப்பட்டது. இக்கற்பதுக்கை பரம்பிக்குளம், ஆழியாறு திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட சாலைப்பகுதியில் கண்டறியப்பட்டன. எனவே இப்பகுதி அகழாய்வு செய்யப்பட்டது. இவ்வகழாய்வு பெருங்கற்காலத்தினைச் சேர்ந்த ஈமச்சின்னங்களுள் ஒன்றான கற்பதுக்கையை ஆய்விடும் முறையாக அமைந்திருந்தது. பொதுவாக அகழாய்வுகளில் வாழ்விடப்பகுதி, ஈமச்சின்னப்பகுதி என்ற இரு பெரும்பிரிவுகள் அடங்கும். ஈமச்சின்னத்தின் அகழாய்வாக ஆனைமலை அகழாய்வு விளங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. |
குறிப்புதவிகள் | - |
|