வரலாறு அறியச் செப்பேடுகளும் துணை புரிகின்றன. செம்பினால் ஆன தகட்டில் பொறிக்கப்படும் எழுத்துகள் செப்பேடுகள் ஆகும். இவை, சாசனங்கள் என்றும் சொல்லப் பெறும். செப்பேட்டில் வெட்டப்படுவது தாம்ரசாசனம் எனப்படும். சின்னமனூர், கூரம், பாகூர் ஆகிய இடங்களில் செப்பேடுகள் கிடைத்துள்ளன. செப்பேடுகள் பல்லவர் காலம் முதலாக மிகுதியாகக் கிடைக்கப் பெற்றுள்ளன. இவை தோன்றிய காலத்தில் தமிழ்மொழி எவ்வாறு எழுதப்பட்டிருந்தது என்பதை அறியப் பெரிதும் துணைபுரிகின்றன. செப்பேடுகள் என்பவை பழங்காலத்தில் மன்னர்களின் கோவில் தானங்கள், வம்சாவளி, போர்க்குறிப்புகள், மரபு வழிக்கதைகள் போன்ற நிகழ்வுகளைப் பதிந்து வைப்பதற்குப் பயன்படுத்தப்பட்ட உலோகத் தகடு ஆகும். இவை தற்காலத்தில் பழங்காலத்தைப் பற்றி அறியும் தொல்லியல் சான்றுகளாக இருந்து வருகின்றன....
வரலாறு அறியச் செப்பேடுகளும் துணை புரிகின்றன. செம்பினால் ஆன தகட்டில் பொறிக்கப்படும் எழுத்துகள் செப்பேடுகள் ஆகும். இவை, சாசனங்கள் என்றும் சொல்லப் பெறும். செப்பேட்டில் வெட்டப்படுவது தாம்ரசாசனம் எனப்படும். சின்னமனூர், கூரம், பாகூர் ஆகிய இடங்களில் செப்பேடுகள் கிடைத்துள்ளன. செப்பேடுகள் பல்லவர் காலம் முதலாக மிகுதியாகக் கிடைக்கப் பெற்றுள்ளன. இவை தோன்றிய காலத்தில் தமிழ்மொழி எவ்வாறு எழுதப்பட்டிருந்தது என்பதை அறியப் பெரிதும் துணைபுரிகின்றன. செப்பேடுகள் என்பவை பழங்காலத்தில் மன்னர்களின் கோவில் தானங்கள், வம்சாவளி, போர்க்குறிப்புகள், மரபு வழிக்கதைகள் போன்ற நிகழ்வுகளைப் பதிந்து வைப்பதற்குப் பயன்படுத்தப்பட்ட உலோகத் தகடு ஆகும். இவை தற்காலத்தில் பழங்காலத்தைப் பற்றி அறியும் தொல்லியல் சான்றுகளாக இருந்து வருகின்றன.
இயற்கையாக ஓலைச்சுவடிகள் அழிவது போலச் செப்பேடுகள் அழிவது இல்லை. எனவே பண்டைய மக்கள் செப்பேடுகளைப் படிக்கவும் பாதுகாக்கவுமின்றிப் பூமியில் புதைத்து வைத்தனர். பல செப்பேடுகள் தொல்லியல் ஆய்வாளர்களால் கண்டெடுக்கப்பட்டன. தனிப்பட்டவர்களிடம் உள்ள செப்பேடுகள் நகல் எடுக்கப்பட்டுள்ளன.
செப்பேடுகள் அவை கிடைத்த இடத்தைக் கொண்டோ அவை இருக்கும் இடத்தைக் கொண்டோ பெயரிடப்படுகின்றன. செப்பேடுகளை அவை கிடைக்கும் இடத்தை மட்டும் வைத்து அவ்விடத்திற்கே உரியது என்று கூறமுடியாது. ஏனெனில் செப்பேடுகளை எடுத்துச் செல்வது எளிமையாக இருப்பதன் காரணமாக ஓரிடத்திற்குரியவை வேறுபட்ட தொலைவான இடங்களில் கூடக் கிடைக்கலாம்.
தமிழ் மொழி, எழுத்துத் தொடர்பான தமிழ்ச்செப்பேடுகள், பல்வேறு தென்னிந்திய அரச மரபினரால், தனிப்பட்டவர்களுக்கும், பொது நிறுவனங்களுக்கும் வழங்கப்பட்ட, ஊர்கள், வேளாண்மை நிலங்கள் மற்றும் வேறு கொடைகள் குறித்த பதிவுகள் ஆகும். தமிழ் நாட்டின் வரலாற்றை மீளுருவாக்கம் செய்வதில் இச்செப்பேடுகள் பற்றிய ஆய்வுகள் முக்கியமானவை ஆகும். தமிழ்ச் செப்பேடுகள் தொடர்பான கொடைகள் கி.பி 10-ஆம் நூற்றாண்டு தொடக்கம் 19-ஆம் நூற்றாண்டு வரையிலான காலப்பகுதியைச் சேர்ந்தவையாகக் காணப்படுகின்றன. இவை பெரும்பாலும், சாளுக்கியர், சோழர், விஜயநகர அரசர்களின் காலத்தைச் சேர்ந்தவை. மத்தியகாலத் தென்னிந்தியாவின் சமூக நிலை பற்றி அறிவதற்கு உதவுவதால் இவை கல்வெட்டியல் தொடர்பில் மிகப் பெறுமதியானவை. அத்துடன், தென்னிந்திய அரச மரபினர் தொடர்பான வரலாற்றில் காணப்படும் இடைவெளிகளை நிரப்புவதிலும் இவை பெரிதும் துணை புரிகின்றன.