செப்பேடுகள்

          வரலாறு அறியச் செப்பேடுகளும் துணை புரிகின்றன. செம்பினால் ஆன தகட்டில் பொறிக்கப்படும் எழுத்துகள் செப்பேடுகள் ஆகும். இவை, சாசனங்கள் என்றும் சொல்லப் பெறும். செப்பேட்டில் வெட்டப்படுவது தாம்ரசாசனம் எனப்படும். சின்னமனூர், கூரம், பாகூர் ஆகிய இடங்களில் செப்பேடுகள் கிடைத்துள்ளன. செப்பேடுகள் பல்லவர் காலம் முதலாக மிகுதியாகக் கிடைக்கப் பெற்றுள்ளன. இவை தோன்றிய காலத்தில் தமிழ்மொழி எவ்வாறு எழுதப்பட்டிருந்தது என்பதை அறியப் பெரிதும் துணைபுரிகின்றன. செப்பேடுகள் என்பவை பழங்காலத்தில் மன்னர்களின் கோவில் தானங்கள், வம்சாவளி, போர்க்குறிப்புகள், மரபு வழிக்கதைகள் போன்ற நிகழ்வுகளைப் பதிந்து வைப்பதற்குப் பயன்படுத்தப்பட்ட உலோகத் தகடு ஆகும். இவை தற்காலத்தில் பழங்காலத்தைப் பற்றி அறியும் தொல்லியல் சான்றுகளாக இருந்து வருகின்றன....

மேலும் படிக்க