சிவகுமார முத்துவிஜயரெகுநாத சேதுபதி காத்ததேவர் செப்பேடு

செப்பேட்டின் பெயர் - சிவகுமார முத்துவிஜயரெகுநாத சேதுபதி காத்ததேவர் செப்பேடு
செப்பேடு கிடைக்கப் பெற்ற இடம் - ஏர்வாடி பள்ளிவாசல்
ஊர் - ஏர்வாடி
வட்டம் - கடலாடி
மாவட்டம் - இராமநாதபுரம்
மொழியும் எழுத்தும் - தமிழ்-தமிழ்
அரசு / ஆட்சியாளர் - சேதுபதி / சிவகுமாரமுத்துவிஜய ரகுநாத சேதுபதி காத்ததேவர்
வரலாற்று ஆண்டு - 1.11.1742
விளக்கம் -

          ஏர்வாடி பள்ளிவாசல் தர்மமாக பெரிய மாயாகுளம் கிராமத்தை முசாபர் நல்ல இபுராகீம் என்பவருக்கு கொடுத்த பரிசாக இந்தச் செப்பேடு தெரிவிக்கின்றது. இந்தக் கொடை தொடர்பான ஊர், காணி ஆகியவைகளில் இருந்து மன்னருக்கு இறுக்கப்பட்டு வந்த ஊழியம், உலுப்பை, வைக்கல் கட்டு வரி, ஆயக்கட்டு வரி, உம்பளமாட்டு வரி, நிலவரி, பள்வரி, பறைவரி, கம்பளவரி, முள்ளுவரி, காணிக்கை வரி ஆகியவைகளுடன் மேலும் புதிதாக ஏற்படுத்தப்படுகின்ற வருவாய்களும் பள்ளிவாசலுக்குச் சேர இந்தச் செப்பேட்டில் கட்டளையிடப்பட்டுள்ளது.

          அத்துடன் உப்பளத்தில் மூன்றுக்கு ஒரு பறையும், தானிய தவசங்கள் கொள்விளை, விற்பனைக்கும் ஆயத்தீர்வையும், சம்மாடம், சத்தவரி முதலானவைகளும் ஏர்வாடி பள்ளிவாசலுக்கு சர்வமானியமாக கட்டளையிடப்பட்டுள்ளது.

செப்பேடு மின்னுருவாக்கப்பட்ட / சேகரிக்கப்பட்ட நிறுவனத்தின் பெயர் / நபர் - தமிழ் இணையக் கல்விக்கழகம்
குறிப்புதவிகள் - சேதுபதி மன்னர் செப்பேடுகள், டாக்டர் எஸ்.எம்.கமால், ஷர்மிளா பதிப்பகம்,