முகப்பு ஆவணங்கள்செப்பேடுகள் சோழர் எசாலம் செப்பேடுகள்
செப்பேட்டின் பெயர் | - | எசாலம் செப்பேடுகள் |
செப்பேடு கிடைக்கப் பெற்ற இடம் | - | எசாலம் |
ஊர் | - | எழும்பூர் |
வட்டம் | - | அமைந்தகரை |
மாவட்டம் | - | சென்னை |
மொழியும் எழுத்தும் | - | தமிழ், வடமொழி - தமிழ், கிரந்தம் |
அரசு / ஆட்சியாளர் | - | சோழர் / முதலாம் இராஜேந்திரசோழன் |
ஆட்சி ஆண்டு | - | 25 |
வரலாற்று ஆண்டு | - | கி.பி.1036-1037 |
விளக்கம் | - | விழுப்புரம்-செஞ்சி நெடுஞ்சாலையில் நேமூர் என்ற ஊருக்குக் கிழக்கில் எசாலம் என்ற கிராமத்தில் திருவிராமீசுவரம் என அழைக்கப்படும் சிவன் கோயிலில் 1987 இல் கோயில் திருப்பணிக்காகப் பூமியைத் தோண்டியபோது இராசேந்திர சோழன் வெளியிட்ட செப்பேட்டுத் தொகுதியும், இருபதுக்கும் மேற்பட்ட செப்புத் திருமேனிகளும், சிவபூசைப் பொருள்களும் கண்டெடுக்கப்பட்டன. எசாலம் செப்பேடு பதினைந்து ஏடுகளைக் கொண்டது. பதினைந்து ஏடுகளும் ஒரு செப்பு வளையத்தில் கோர்க்கப்பட்டுள்ளது. வளையத்தில் சோழர்களின் இலச்சினை பொறிக்கப்பட்டுள்ளது. இலச்சினையில் புலி, இரட்டை மீன், வில், அம்பு முதலிய சோழ, பாண்டியர், மற்றும் சேரர்களின் சின்னங்கள் பொறிக்கப்பட்டிருப்பதோடு சாளுக்கியர்களின் சின்னமான பன்றியும் காட்டப்பட்டுள்ளன. மேலும் இருவரியில் எழுதப்பட்ட வடமொழி சுலோகம் அமைந்துள்ளது.“அரசர்களின் திருமுடி வரிசைகளின் இரத்னங்களில் திகழ்வதான இது பரகேஸரிவர்மனான ராஜேந்திர சோழனின் சாசநம்“ என்பதாக அந்த செப்பேட்டில் எழுதப்பட்டுள்ளது. எசாலம் செப்பேடு காஞ்சி அரண்மனையில் இருந்து இராஜேந்திர சோழன் வெளியிட்டுள்ளான். “ஜெயங்கொண்ட சோழமண்டலத்து எயில்கோட்டத்து நகரம் காஞ்சிபுரத்து நம்வீட்டின் உள்ளால் நாம் குளிக்குமிடத்துத் தானம் செய்யாவிருந்து“ என்று அரசனின் ஆணையாக செப்பேடு அமைந்துள்ளது. இச்செப்பேடு இராஜேந்திர சோழனின் 25-வது ஆட்சியாண்டில் திருவீராமேசுவரம் சிவன் கோயில் எடுப்பிக்க அளித்த நிலக்கொடையை இச்செப்பேடு தெரிவிக்கிறது. ஜெயங்கொண்ட சோழமண்டலத்தில் உள்ள இராசராச சதுர்வேதி மங்கலத்தில் எய்தார் இருந்தது. எய்தார் என்பது எசாலத்தின் பண்டையப் பெயராகும். இந்த எய்தாரில் மதுராந்தகனாகிய இராசேந்திரனுடைய குரு சர்வசிவ பண்டிதர் இராமீஸ்வரமுடையார் கோயில் எடுப்பிக்க மன்னன் நிலத்தானம் அளித்துள்ளான். நன்னாடு மற்றும் ஏர்ப்பாக்கம் எனும் இரு ஊர்களும் ஒன்றாக்கப்பட்டு விக்கிரம சோழநல்லூர் எனப் பெயரிடப்பட்டு இறையிலியாக வழங்கப்பட்டதை இந்தச் செப்பேடு தெரிவிக்கின்றது. |
செப்பேடு மின்னுருவாக்கப்பட்ட / சேகரிக்கப்பட்ட நிறுவனத்தின் பெயர் / நபர் | - | தமிழ் இணையக் கல்விக்கழகம் |
குறிப்புதவிகள் | - | 1. Dr.R.Nagasamy, Archaeological Finds in South India-Esalam Bronzes a |