திருவாலங்காட்டுச் செப்பேடுகள்

செப்பேட்டின் பெயர் - திருவாலங்காட்டுச் செப்பேடுகள்
செப்பேடு கிடைக்கப் பெற்ற இடம் - திருவாலங்காடு
ஊர் - எழும்பூர்
வட்டம் - அமைந்தகரை
மாவட்டம் - சென்னை
மொழியும் எழுத்தும் - தமிழ், வடமொழி - தமிழ், கிரந்தம்
அரசு / ஆட்சியாளர் - சோழர் / முதலாம் இராஜேந்திரசோழன்
ஆட்சி ஆண்டு - 6
வரலாற்று ஆண்டு - கி.பி.11-ஆம் நூற்றாண்டு
விளக்கம் -

          தொண்டை நாட்டுப் பாடல் பெற்ற தலங்களுள் காளியோடாடும் இரத்தினசபையான திருவாலங்காடு காரைக்கால் அம்மையார் முத்திப்பெற்ற திருத்தலமாகும். சோழர்கள் ஆட்சிக்காலத்தில் திருவாலங்காடு மிகுந்த சிறப்பினைப் பெற்றிருந்தது என்பதனை இக்கோயில் இறைவர்க்கு அரசர்கள் அளித்த கொடைக்கல்வெட்டுகள் மூலம் அறிய முடிகின்றது.

          முதலாம் இராஜேந்திர சோழன் வழங்கிய இவ்வூருக்கான நிலதானம் பற்றிய ஆணையை திருவாலங்காடு செப்பேடு தெரிவிக்கின்றது. 1903-இல் இக்கோயில் திருப்பணியின் போது சில ஐம்பொன் சிலைகளுடன் 31 ஏடுகளைக் கொண்டு இச்செப்பேட்டுத் தொகுதி கண்டறியப்பட்டது.

          திருவாலங்காட்டுச் செப்பேட்டுத் தொகுதியில் 31 ஏடுகள் பெரிய வளையத்துடன் உள்ளன. இணைப்பு வளையத்தில் சோழ அரசின் இலச்சினை காட்டப்பட்டுள்ளது. இலச்சினையின் மேல்பகுதியில் குடையும் அதன் இருபுறமும் சாமரங்களும் உள்ளன. அதன்கீழ் இரட்டைக் கயல்களும், புலியும் பொறிக்கப்பட்டுள்ளன. அவற்றிற்கு இருபுறமும் இருவிளக்குத் தாங்கிகளும், இவற்றிற்குக் கீழே வில்லும் இடம் பெறுகின்றன. பாண்டியர் மற்றும் சேரரை வென்ற சோழப்பேரரசின் புலிச் சின்னத்தோடு, அவ்விரு அரசர்களின் சின்னங்களும் பொறிக்கப்பட்டிருப்பது சோழப்பேரரசின் கீழ் பாண்டிய, சேர நாட்டுப்பகுதிகள் இணைக்கப்பட்டிருந்ததைக் காட்டி நிற்கின்றன. மொத்தம் 31 ஏடுகளில் 10 வடமொழி ஏடுகள் ஆகும். கிரந்த எழுத்துக்களில் வடமொழிப்பகுதி பொறிக்கப்பட்டுள்ளது. மற்ற 21 ஏடுகள் தமிழ் எழுத்தில் காணப்படுகின்றன. வடமொழிப்பகுதி சுலோகமாகவும், தமிழ்ப்பகுதி உரைநடையாகவும் உள்ளன.

          முதலாம் இராஜேந்திர சோழனின் ஆறாவது ஆட்சியாண்டைக் குறிப்பிடும் திருவாலங்காட்டுச் செப்பேடுகள் அக்கோயில் இறைவர்க்கு இறையிலியாக அளிக்கப்பட்ட நிலக்கொடையைப் பற்றியும், வழங்கப்பட்ட நிலத்தின் எல்லைகள் பற்றி விரிவாகவும் இச்செப்பேட்டில் குறிக்கப்பட்டுள்ளன. மேலும் இங்குள்ள அம்மை நாச்சியாருக்கு வழங்கப்பட்ட கொடைபற்றியும் கூறப்பட்டுள்ளன.

ஒளிப்படம் எடுத்தவர் - முனைவர் கோ.சசிகலா
ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர் - தமிழ் இணையக் கல்விக்கழகம்
சுருக்கம் -

தமிழகத்தின் வரலாற்றின் முக்கியமான பகுதியை வெளிப்படுத்திய செப்பேடுகள் திருவாலங்காட்டில் கிடைத்தன. ஒரு பெரிய வளையத்தில் சேர்த்து சோழ முத்திரையுடன் தமிழிலும், வடமொழியிலும் பொறிக்கப்பட்ட சாசனங்களுடன் கிடைத்த அந்த 22 செப்பேடுகள் சோழர்களின் வரலாற்றை நன்கு புலப்

குறிப்புதவிகள் -

1. தென்னிந்திய கல்வெட்டுகள் தொகுதி 3, தொல்லியல் துறை, மைசூர். 2. சு.