மயிலாடுதுதுறைச் செப்பேடு

செப்பேட்டின் பெயர் - மயிலாடுதுதுறைச் செப்பேடு
செப்பேடு கிடைக்கப் பெற்ற இடம் - மயிலாடுதுறை
ஊர் - மயிலாடுதுறை
வட்டம் - மயிலாடுதுறை
மாவட்டம் - நாகப்பட்டினம்
மொழியும் எழுத்தும் - தமிழ்-தமிழ்
அரசு / ஆட்சியாளர் - நரசிங்க ராயர்
வரலாற்று ஆண்டு - கி.பி.16-ஆம் நூற்றாண்டு
விளக்கம் -

செங்குந்தர்-கைக்கோளர் என்னும் நெசவுத் தொழில் புரியும் சமுதாயத்தினர் தங்களை முருகப் பெருமானின் தொண்டர் வீரபாகு வழி வந்தவர்களாகக் கூறிக் கொள்வர். முருகனைத் தங்கள் குலக் கடவுளாகக் கொண்டு வழிபடுவர். முருகன் மீதான கந்தபுராணம் தமிழில் கச்சியப்பசுவாமிகளால் எழுதப்பட்டு இன்று பரவலாகத் தமிழில் உள்ள நூலாகும். இச்செப்பேட்டில் திருச்சேஞ்ஞலூரைச் சேர்ந்த ஞானப்பிரகாச சுவாமிகள் கந்தபுராணம் பாடினார் என்றும் அதனில் “கைக்கோளர் வரலாற்றினை பெருமையை மிகுதியாயிப் பாடி பிரசங்கித்து னாவினால் மழுவெடுத்து அரங்கேற்றி நவவீரர் வம்சம் னிச்சியத்தார்“ என்றும் அதற்காக இவரை எட்டுக்கால் பீடத்தில் மீது இடங்கை பாவாடை விரித்து, இருபுறமும் விளக்கு வைத்து, பாதபூசை செய்து 1. தறிக்கு ஒருபணம் 2. தலைக்கட்டுக்கு ஒரு பணம் 3. நன்மைக்கு ஒரு பணம் 4. தீமைக்கு ஒரு பணம் 5. மூக்கூத்திக்கு ஒரு பணம் என கொங்கு நாட்டில் உள்ள 72 நாட்டுக் கைக்கோளரும் தருவதெனத் தீர்மானித்து மரியாதை செய்தனர். மேலும் இவர் கைக்கோளர் உள்ள எந்த இடத்திற்கும் சென்றாலும் இவரைப் பாவாடை (துணி) விரித்து வரவேற்று உபசாரம் செய்ய வேண்டும் என்றும் தீர்மானித்தனர். இந்தத் தீர்மானங்கள் காஞ்சிபுரம் ஏகாம்பர் குாயிலில் முகவாயில் எழுந்தான் என்ற மண்டபத்தில் கூடி எடுக்கப்பட்டு “சமயச் செப்பேடு“ என்ற பெயரில் செப்பேடாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.

செப்பேடு மின்னுருவாக்கப்பட்ட / சேகரிக்கப்பட்ட நிறுவனத்தின் பெயர் / நபர் - தமிழ்நாடு அரசுத் தொல்லியல் துறை
குறிப்புதவிகள் - தமிழகச் செப்பேடுகள்,தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சென்னை. 2005