வீர உதயமார்த்தாண்டவர்மன் / பிற்காலச் சேரர் , கி.பி.1556-1595

மொழியும் எழுத்தும் - தமிழ்
வடிவம் - வட்டம்
உலோகம் - செம்பு
காலம் / ஆட்சியாளர் - வீர உதயமார்த்தாண்டவர்மன் / பிற்காலச் சேரர்
வரலாற்று ஆண்டு - கி.பி.1556-1595
கண்டெடுத்த இடம் - மதுரை
முன்பக்கம் - நிற்கும் மனித உருவம் உள்ளது.
பின்பக்கம் - மேல் பகுதியில் சங்கும், அதன் கீழே ‘மா’ என்ற தமிழ் எழுத்தும் அதன் இடப்பக்கத்தில் சக்கரம் ஒன்றும் உள்ளன. இவற்றின் கீழே யானை ஒன்று உள்ளது. மார்த்தாண்டவர்மன் என்பதன் சுருக்கக் குறியீடாகவே ‘மா’ பொறிக்கப்பட்டுள்ளது எனலாம்.
எடை - 2.52 கிராம்
மொழி - தமிழ்
கண்டுபிடிக்கப்பட்ட இடம் - தமிழ்
சுருக்கம் -

         சங்க காலம் முதல், கி.பி 16ஆம் நூற்றாண்டு வரை, சேரரின் ஆட்சி தென்னிந்தியாவின் ஏதோ ஒரு பகுதியில் தொடர்ந்து கொண்டே இருந்து வந்துள்ளது. சங்க காலத்தில் மேற்குக் கடற்கரையோரப் பகுதியான வஞ்சியைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட சேரர்கள் பின்னர் இரண்டு பிரிவாகப் பிரிந்து ஆட்சி செலுத்தினர்.  ஒரு பிரிவினர் வஞ்சியையே தலைநகராகக் கொண்டு தொடர்ந்து ஆண்டனர். இப்பகுதி ‘கொங்குநாடு’ என்பதால் இவர்கள் ‘கொங்கு சேரர்கள்’ எனப்பட்டனர். இன்னொரு பிரிவினர் பிரிந்து வந்து, கரூரைப் புதிய தலைநகரமாகக் கொண்டு ஆண்டனர். இவர்கள் கி.பி 12ஆம் நூற்றாண்டில் கன்னியாகுமரியையும் வென்று தங்கள் ஆட்சியை விரிவுபடுத்தினர். இவர்களின் நாடு ‘வேணாடு’ எனப் பெயரிடப்பட்டது. இவர்கள் ‘வேணாடு சேரர்கள்’ எனப்பட்டனர்.

         கொங்கு சேரர் காசுகள் ஒரு பக்கம் தட்டையாகவும், மறு பக்கம் புடைப்பாகவும் புளியங்கொட்டை போன்ற வடிவில் காணப்படுகின்றன. இவற்றில் வில்லும், ஸ்ரீயக்கி எனும் கடவுள் உருவமும், பனை மரங்களும் குறியீடுகளாகப் பொறிக்கப்பட்டுள்ளன. இந்த நாணயங்களில் எழுத்துப் பொறிப்பு இல்லாததால், நாணயங்களை வெளியிட்ட மன்னர், வெளியான ஆண்டு ஆகியவற்றை சரிவர அறிய முடியவில்லை. கொங்கு சேரர்களைப் போல அல்லாமல், வேணாடு சேரர்கள் எழுத்துப் பொறிப்புள்ள பலவகை நாணயங்களை வெளியிட்டுள்ளனர். இவர்கள் கி.பி 12ஆம் நூற்றாண்டில் வெளியிட்ட காசுகளில் தேவ நாகரி எழுத்துக்களும், கி.பி 16ஆம் நூற்றாண்டு வாக்கில் வெளியிட்ட நாணயங்களில் தமிழ் எழுத்துக்களும் காணப்படுகின்றன. பிற்கால சோழர் மற்றும் பிற்கால பாண்டியர் பற்றிய ஆய்வுகள் பாட நூல்களில் இடம்பெற்றுள்ளன. ஆனால் பிற்கால சேரர்கள் பற்றி பாடம் எதுவும் இல்லை என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

ஒளிப்படம் எடுத்தவர் - மன்னர் மன்னன்
ஒளிப்படம் வழங்கிய நிறுவனம்/ நபர் - மன்னர் மன்னன்
குறிச்சொல் - முத்திரைக் காசுகள், உள்ளூர் முத்திரைக் காசுகள், செம்பு காசுகள், வெள்ளி காசுகள், நாணயங்கள், தமிழகக் காசுகள், தமிழக நாணயங்கள், வெள்ளி முத்திரைக் காசுகள், காசுகள், காசியல், நாணயவியல், ஆங்கிலேயர் வெளியிட்ட காசுகள், அயல்நாட்டினர் வெளியிட்ட காசு, சங்க கால சேரர் காசுகள், வட்டம், சதுரம், சங்க காலம், சேரர், சோழர், பாண்டியர், பல்லவர், மலையமான்
குறிப்புதவிகள் -

1. Dr. T.S. Sridhar and N. Sundararajan, A Study of Silver Punched-Marked Coins from Vaigainallur Village, Kulithalai Taluk of Karur district, Tamilnadu, Government Museum, Chennai, 2010. 

2. V. Jeyaraj, A Technical Study on the Coins of Arcot Nowabs, Government Museum, Chennai, 2005. 

3. T.G. Aravamuthan, Catalogue of the Roman and Byzantine Coins in the Madras Government Museum,  Government Museum, Chennai, 2002. 

4. Dr. N. Sankaranarayana, Catalogue of Venetian Coins in the Government Museum, Madras, Government Museum, Chennai, 1999. 

5. T.G. Aravamuthan,  Catalogue of Venetian Coins in the Madras Governement Museum, 1999,  

6. Dr. N. Sankaranarayana, Catalogue of Vijayanagar Coins in the Madras Government Museum,  Government Museum, Chennai, 1994. 

7. Coins of India Through the Ages, Government Museum, Chennai. 

8. Dr. T.S. Sridhar and N. Sundararajan, Foreign Coins in the Collection of Government Museum Chennai (Chinese, Roman & Venetian Coins), Government Museum, Chennai, 2011. 

9. Dr. R. Kannan, Manual on the Numismatic Gallery in the Government Museum Chennai, Government Museum, Chennai, 2003.  

10. Dr. N. Sankaranarayana, Medals in the Collection of the Chennai Government Museum, Government Museum, Chennai, 1997.  

11. N. Sundararajan, நாணயவியல்,  Government Museum, Chennai, 2011.  

12. Dr. T. S. Sridhar, Roman Coin Finds in  South India-An Interpretation from the viewpoint of Roman Numismatics and Economy, Government Museum, Chennai. 

13. M. Rama Rao, Select Satavahana Coins in the Government Museum, Madras,  Government Museum, Chennai, 2000.  

14. முனைவர் ரா. கண்ணன், தமிழ்நாட்டு நாணயங்கள்,  Government Museum, Chennai, 2007.  

15. T. Balakrishnan Nayar, The Dowlaishweram Hoard of Eastern Chalukyan and Chola Coins, 2002.