ஆற்காடு நவாபு கோட்டை

    அமைவிடம் - ஆற்காடு
    ஊர் - ஆற்காடு
    வட்டம் - ஆற்காடு
    மாவட்டம் - வேலூர்
    வகை - கோட்டை
    தொல்பழங்காலம் / வரலாற்றுக்காலம் - கி.பி. 1703-1710
    அருகிலுள்ள தொல்லியல் சின்னங்கள் - வேலூர் அருங்காட்சியகம், ஜலகண்டேசுவர் கோயில், வேலூர் கோட்டை, ஆரணி கோட்டை, அப்துல்லாபுரம் அரண்மனை
    பாதுகாக்கும் நிறுவனம் - மத்தியத் தொல்லியல் துறை
    விளக்கம் -

             ஆற்காடு நவாப்புகள் (Arcot Nawab) என அழைக்கப்படுபவர்கள் 1690 முதல் 1801 வரை தென்னிந்திய கருநாடக பகுதிகளை ஆண்ட மன்னர்கள் ஆவர். இவர்கள் தலைநகரம் இன்றைய சென்னை அருகில் உள்ள ஆற்காடு ஆகும். தமிழக வரலாற்றில் மிக முக்கியமான இவர்கள் பொதுவாக கருநாடக நவாப்புகள் எனவும் அழைக்கப்படுகின்றனர்.

             இவர்கள் ஆட்சியின் பொழுதுதான் ஆங்கிலேயேர்கள் மொகலாய ஆட்சியாளர்கள் உதவியுடன் இந்தியாவில் காலூன்ற ஆரம்பித்தனர். பதினெட்டாம் நூற்றாண்டில் தாவூத் கான் பண்ணி (1703-1710) என்ற இரண்டாவது ஆற்காடு நவாப் ஆற்காடு கோட்டையைக் கட்டினார். பத்து ஏக்கரில் பரந்து விரிந்த ஆற்காட் கோட்டையை திப்பு சுல்தானின் படை பெரிதும் அழித்தது.

    ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர் - திரு. குமரன் சண்முகம்
    சுருக்கம் -

             தற்போது ஆற்காடு கோட்டையின் எஞ்சிய பகுதிகள் வருமாறு 1)டெல்லி கேட் மற்றும் பாலாற்றை ஒட்டிய ஆற்காடு கோட்டையின் இடிபாடுகள் 2)ஆலம்பன கோட்டை (ராஜா ராணி குளம், பீரங்கி, மஸ்ஜித்) 3)பச்சைக்கல் மசூதி 4)முப்படுவெட்டி பகுதியில் உள்ள கோட்டை சுற்றுச்சுவரின் இடிபாடுகள். 5) வேலூர் ஆற்காடு சாலையில் ஆற்காடு அருகில் பாலாற்றங்கரையில் ஆற்காடு கோட்டையின் பீரங்கி மேடைகள் மற்றும் குதிரை லாயம்.