முகப்பு வரலாற்றுச் சின்னங்கள் கல்லறைகள் இராபர்ட் கால்டுவெல் கல்லறை
அமைவிடம் | - | இடையன்குடி |
ஊர் | - | இடையன்குடி |
வட்டம் | - | இராதாபுரம் |
மாவட்டம் | - | திருநெல்வேலி |
வகை | - | கல்லறை |
தொல்பழங்காலம் / வரலாற்றுக்காலம் | - | 1891 ஜனவரி 31-ஆம் தேதி |
அருகிலுள்ள தொல்லியல் சின்னங்கள் | - | இராதாபுரம் சீதள சிவலிங்கேஸ்வரர் கோயில், இராதாபுரம் நித்தியகல்யாணி அம்பாள் கோயில் |
பாதுகாக்கும் நிறுவனம் | - | தமிழ்நாடு அரசு |
விளக்கம் | - | அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த கால்டுவெல், 1838-ம் ஆண்டில், தமது 24-வது வயதில் மதபோதகராக, சென்னை மாநகர் வந்தடைந்தவர்; பின்னர் நெல்லை பேராயராக பொறுப்பேற்று, பன்னூறு ஓலைச்சுவடிகளையும், சங்ககாலத் தமிழ் இலக்கியங்களையும் பயின்றவர்; புதைபொருள் ஆராய்ச்சியில் ஈடுபட்டுப் பாண்டியர் காலத்திற்குச் சொந்தமான கயல் சின்னம் பொறிக்கப்பட்ட நாணயங்களைக் கண்டுபிடித்தவர்; நெல்லை வரலாற்றை ஆய்வு செய்து, தமது ஆய்வுகளின் அடிப்படையில், "திருநெல்வேலி சரித்திரம்'' எனும் பெயரில், நெல்லை வரலாற்றை நூலாக எழுதியவர்; தமிழ் மொழியை மட்டுமல்லாமல், தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற பிற திராவிட மொழிகளையும் கற்றவர்; திராவிட மொழிகளுக்கிடையில் உள்ள ஒற்றுமைகள் குறித்து ஆய்வு செய்தவர்; அதன் பயனாக, `திராவிட மொழிகள்' என்னும் சொல்லாக்கத்தை முதன்முதல் உருவாக்கி உலகுக்கு அறிமுகம் செய்தவர்; அத்துடன், தமிழ் மொழி, "செம்மொழி'' என முதல் குரல் கொடுத்த தமிழர் பரிதிமாற்கலைஞர் என்றால்; தமிழ்மொழி செம்மொழியென்று முதலில் முழக்கமிட்ட வெளிநாட்டவர் அறிஞர் ராபர்ட் கால்டுவெல்தான். பரிதிமாற்கலைஞர் தமிழ்மொழி செம்மொழியென 1887-ம் ஆண்டு குரல் கொடுத்ததற்கு 30 ஆண்டுகளுக்கு முன்பே, 1856-ஆண்டில் அறிஞர் கால்டுவெல் தாம் எழுதிய "திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்ற ஒப்புவமை காண்பித்திட இயலாத, உயர்பெரும் நூலில், "திராவிட மொழிகள் அனைத்திலும், உயர் தனிச் செம்மொழியாய் நிலைபெற்று விளங்கும் தமிழ், தன்னிடையே இடம் பெற்றிருக்கும் சமஸ்கிருதச் சொற்களை அறவே அகற்றிவிட்டு தனித்து உயிர் வாழ்வதோடு அவற்றின் துணையை ஒருசிறிதும் வேண்டாமல் வளம் பெற்று வளர்வதும் இயலும்'' என்னும் வரலாறு போற்றும் மகத்தான உண்மையையும் நிலைநாட்டியவர். அதன்மூலம் செம்மொழித் தமிழின் மேன்மையையும் உலகறியச் செய்தவர். கால்டுவெல் அவர் ஆற்றி வந்த சமயப்பணிகளிலிருந்து ஓய்வு பெற்று, கொடைக்கானல் மலையில் தங்கி வாழ்ந்து வந்தார். 1891 ஜனவரி 31-ஆம் தேதி கொடைக்கானலிலேயே காலமானார். அவரது உடல் இடையன்குடியில், அவர் எழுப்பிய தேவாலய வளாகத்திலேயே அடக்கம் செய்யப் பட்டுள்ளது. |
சுருக்கம் | - | திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் தந்த தமிழறிஞர் கால்டுவெல் வாழ்ந்து-மறைந்த நெல்லை மாவட்டம் இடையன்குடியில் உள்ள இல்லம் தமிழக அரசால் நினைவிடமாக்கப்பட்டுள்ளது. |