முகப்பு வரலாற்றுச் சின்னங்கள் குடைவரைக் கோயில்கள் கழுகுமலை சமணக்குடைவரை
அமைவிடம் | - | கழுகுமலை சமணர் கோயில் |
ஊர் | - | கழுகுமலை |
வட்டம் | - | கோவில்பட்டி |
மாவட்டம் | - | தூத்துக்குடி |
வகை | - | குடைவரை |
தொல்பழங்காலம் / வரலாற்றுக்காலம் | - | கி.பி.8-ஆம் நூற்றாண்டு |
அருகிலுள்ள தொல்லியல் சின்னங்கள் | - | கழுகுமலை வெட்டுவான் கோயில் |
பாதுகாக்கும் நிறுவனம் | - | மத்தியத் தொல்லியல் துறை |
விளக்கம் | - | கழுகுமலை வெட்டுவான் கோயில் அருகே பாறை முகட்டில் புடைப்புச் சிற்பமாக சமணத் தீர்த்தங்கரரின் உருவம் காணப்படுகிறது. வட்டெழுத்துக் கல்வெட்டுகளுடன் கூடிய சமணச் சிற்பங்களும் இங்கு உள்ளன. இவையாவும் கழுகு மலை கிபி. 8-ஆம் நூற்றாண்டிலிருந்து 10 ஆம் நூற்றாண்டு முடிய சமணத் தொடர்பு மிக்கதாக விளங்கியமையை எடுத்துரைக்கின்றன. இங்கு இருபுறமும் சிம்மாசனத்தில் அமர்ந்த சிற்றுருவங்கள் மரங்களின் கீழ் காணப்படுகின்றன. மிகவும் அற்புதமான வேலைப்பாடுகளுடன் இயக்கன், இயக்கியின் உருவங்களும் இங்கு உள்ளன. ஒரு சிற்ப வரிசையில் தரனேந்திரயக்ஷனும், பத்மாவதியும் காணப்படுகின்றனர். தலைக்குமேல் படம் எடுத்தவாறு உள்ள நாகத்துடன் நின்ற கோலத்தில் உள்ள பார்சுவநாத தீர்த்தங்கரரின் உருவ அமைப்பு பாண்டியர்களின் கலைத் திறனுக்கு ஓர் எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. இருபத்தி மூன்று சமணத் தீர்த்தங்கரர்களின் உருவங்களும் இங்கு வரிசையாக அமர்ந்துள்ள நிலையில் சிற்பமாக அமைக்கப்பட்டுள்ளன. கழுகுமலைக் கோயில் பாண்டியர்களின் அழகுமிகு கலைக்கோயில் எனலாம். நெடுஞ்சடையன் பராந்தகன் வரகுணனின் கல்வெட்டு ஒன்றும் இங்குள்ளது. |
ஒளிப்படம் எடுத்தவர் | - | சென்னைப் பல்கலைக்கழகம், தொல்லியல் துறை |
ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர் | - | தமிழ் இணையக் கல்விக் கழகம் |
சுருக்கம் | - | கழுகுமலை வெட்டுவான் கோயில் அருகே பாறை முகட்டில் புடைப்புச் சிற்பமாக சமணத் தீர்த்தங்கரரின் உருவம் காணப்படுகிறது. வட்டெழுத்துக் கல்வெட்டுகளுடன் கூடிய சமணச் சிற்பங்களும் இங்கு உள்ளன. இவையாவும் கழுகு மலை கிபி. 8-ஆம் நூற்றாண்டிலிருந்து 10 ஆம் நூற்றாண்டு முடிய சமணத் தொடர்பு மிக்கதாக விளங்கியமையை எடுத்துரைக்கின்றன. |
குறிப்புதவிகள் | - | தி.இராசமாணிக்கம், தென்னகக் குடைவரைக் கோயில்கள், திருநெல்வேலி சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, 1989. இராசவேல், சு., சேஷாத்திரி, அ. கி., தமிழ்நாட்டுக் குடைவரைக் கோயில்கள், பண்பாட்டு வெளியீட்டகம், சென்னை, 2000.நளினி, மு., கலைக்கோவன், இரா., தென்தமிழ |