ஆத்தூர் கோட்டை

  அமைவிடம் - ஆத்தூர்
  ஊர் - ஆத்தூர்
  வட்டம் - ஆத்தூர்
  மாவட்டம் - சேலம்
  வகை - கோட்டை
  தொல்பழங்காலம் / வரலாற்றுக்காலம் - கி.பி.16-ஆம் நூற்றாண்டு
  அருகிலுள்ள தொல்லியல் சின்னங்கள் - மேட்டூர் அணை, ஏற்காடு, சங்ககிரி கோட்டை
  பாதுகாக்கும் நிறுவனம் - தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை
  விளக்கம் -

           ஆத்தூர் கோட்டையை, கெட்டி முதலி மரபினர் 16-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து, 17ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி வரை ஆண்டனர். இவர்களே, ஆத்தூரில் கோட்டையைக் கட்டினார்கள்.

           கி.பி. 1689ல் மைசூரை ஆண்ட சிக்க தேவராயன் இப்பகுதியைப் பிடித்தான். பின்னர் இது அயிதர் அலியின் ஆட்சிப் பகுதியாக மாறியது. 1792-இல் மூன்றாம் மைசூர் போரின் போது ஆத்தூர், திப்புவிடமிருந்து ஆங்கிலேயர் வசம் மாறியது.

          ஆங்கிலேயர் ஒரு இராணுவத் தொகுப்பை, இங்கு 1799 ஆம் ஆண்டு வரை வைத்திருந்தார்கள். பிறகு 1824 வரை ஆயுதங்களின் கிட்டங்கித் தளமாக விளங்கியது. அதன் பின்னர் அந்த மதிப்பையும் இது இழந்தது. இக்கோட்டை 62 ஏக்கர்கள் அளவுடையது. (250,000 சதுரமீட்டர்கள்/m2) கோட்டையின் சுவர்கள் ஏறத்தாழ 30 அடி (9.1 மீ) உயரமும், 15 (4.6 மீ) அடி அகலமும் உடையதாக உள்ளது.

  ஒளிப்படம் எடுத்தவர் - தமிழ்நாடு அரசுத் தொல்லியல் துறை
  ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர் - தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை
  சுருக்கம் -

           இக்கோட்டை தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறைக் கட்டுபாட்டில் இருக்கிறது.  இருப்பினும், கோட்டையின் உள்ளே ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவன் ஆலயமும், திருமால் ஆலயமும் உள்ளன. மேலும், 25 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட, ஐயனார் ஆலயமும் உள்ளது. கோட்டையின் பெரும்பகுதி குடியிருப்புகளாக மாறியுள்ளன. குறிப்பிட்ட சில பகுதிகள் மட்டுமே, அரசின் கட்டுபாட்டு எல்லைக்குள் இருப்பினும், சிதிலமடைந்து வருகிறது. அவ்வப்போது அரசுத்துறையும் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்கிறது