கோயிலின் பெயர் - பெருஞ்சேரி புத்தர் கோயில்
வேறு பெயர்கள் - ரிஷிக்கோயில்
அமைவிடம் - பெருஞ்சேரி புத்தர் கோயில், பெருஞ்சேரி, மயிலாடுதுறை வட்டம், நாகப்பட்டினம் மாவட்டம்.
ஊர் - பெருஞ்சேரி
வட்டம் - மயிலாடுதுறை
மாவட்டம் - நாகப்பட்டினம்
சமய உட்பிரிவு - திருக்கோயிலில் உள்ள மூலவர் சமய உட்பிரிவு விவரம் (சைவம்/வைணவம்/அம்மன்/முருகன் /கிராமதெய்வம்/சமணம்/பௌத்தம்/இதரவகை) - பௌத்தம்
மூலவர் பெயர் - புத்தர்
காலம் / ஆட்சியாளர் - கி.பி.10-ஆம் நூற்றாண்டு / சோழர்கள்
கல்வெட்டு / செப்பேடு - இல்லை
சுவரோவியங்கள் - இல்லை
சிற்பங்கள் - சுமார் 5'3'' உயரமுள்ள, தியான கோலத்தில் அமர்ந்த நிலையில் புத்த பகவானின் திருவுரு கல்லால் வடிக்கப்பட்டுள்ளது. சிரஸ்திகம் என்னும் வட்ட சுருள்முடி கொண்ட உச்சிக்கொண்டையுடன் கூடிய தலையலங்காரத்தில், தொள்ளையுள்ள நீள்செவிகளுடன், கண்களை மூடிய படி புத்தர் காட்சியளிக்கிறார். நெற்றியில் இருபுருவங்களின் மத்தியில் வட்டமான முத்திரை ஒன்று காட்டப்பட்டுள்ளது. நீள்விழிகளுடனும், குமிண் சிரிப்புடன் காணப்படும் புத்தரின் மேலாடை இடது தோளின் வழியே இடமார்பில் தொங்குகிறது. ஆடையின் புரியொன்று இடைவரை செல்கிறது. கணுக்கால் வரையிலான கீழாடை பத்மாசனத்தில் அமர்ந்த கோலத்தினூடே தெரிகிறது. இரு கைகளும் தியானமுத்திரையில் உள்ளன.
தலத்தின் சிறப்பு - தமிழ்நாட்டில் உள்ள பெரிய புத்தர் சிலைகளுள் இதுவும் ஒன்று.
சுருக்கம் - தமிழகத்தில் அதிக எண்ணிக்கையில் புத்தர் சிற்பங்கள் நாகை மாவட்டத்தில் தான் கிடைத்திருக்கின்றன. நாகப்பட்டினத்தில் பல்வேறு இடங்களில் கிடைத்தவற்றுள் பெருஞ்சேரி புத்தர் சிற்பம் அளவில் பெரியது. தியானக்கோலத்தில் அமர்ந்த நிலையில் காட்டப்பட்டுள்ள இச்சிற்பம் தற்போது செங்கல் தளி ஒன்றில் வைக்கப்பட்டு வழிபாட்டில் உள்ளது. தற்போது “ரிஷிக்கோயில்“ என்று ஊர் மக்களால் அழைக்கப்படும் இந்தப் புத்தர் கோயிலிலுள்ள புத்தர் சிலை கி.பி. 5 ஆம் நூற்றாண்டில் நிறுவப்பட்டிருக்கலாம் என்று "பெளத்தமும் தமிழும்' நூலை எழுதிய சீனி.வேங்கடசாமி கூறுகிறார்.
கோயிலின் அமைப்பு - சதுர வடிவ அறை போன்று புத்தரின் கருவறை செங்கல்லால் கட்டப்பட்டுள்ளது. செங்கல்லாலான ஸ்தூபி கருவறையின் மேல் அமைக்கப்பட்டுள்ளது. ஸ்தூபியின் நேர் கீழே மையப்பகுதியில் புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளது. சுவர்ப்பகுதிக்கு மேல் செல்லும் ஸ்தூபியின் செங்கல் வடிவமைப்பு கட்டிடக்கலைக்கு சிறந்த சான்றாக விளங்குகிறது.
பாதுகாக்கும் நிறுவனம் - பெருஞ்சேரி கிராமத்தார்
அருகில் உள்ள கோவில்கள்/தொல்லியல் சின்னங்கள் - பெருஞ்சேரி ஸ்ரீவாகீசுவரசுவாமி கோயில்
செல்லும் வழி - மயிலாடுதுறை-கிளியனூர் செல்லும் வழியில் பெருஞ்சேரி அமைந்துள்ளது. மயிலாடுதுறை - திருவாரூர் சாலையில் சுந்தரப்பன் சாவடியில் இருந்து கிளியனூர் செல்லும் சாலையில் அரை கிலோமீட்டர் தூரத்தில் பெருஞ்சேரி. உள்ளது.
கோவில் திறக்கும் நேரம் - காலை 7.00 முதல் மாலை 5.00 வரை
அருகிலுள்ள பேருந்து நிலையம் - பெருஞ்சேரி
அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம் - மயிலாடுதுறை
அருகிலுள்ள விமான நிலையம் - திருச்சி
தங்கும் வசதி - மயிலாடுதுறை வட்டார விடுதிகள்
ஒளிப்படம்எடுத்தவர் - க.த.காந்திராஜன்
ஒளிப்படம்வழங்கிய நிறுவனம் / நபர் - தமிழ் இணையக்கல்விக் கழகம்