அடுக்கம்பாறை

அமைவிடம் - அடுக்கம்பாறை
ஊர் - நெகனூர்பட்டி
வட்டம் - செஞ்சி
மாவட்டம் - விழுப்புரம்
வகை - பெருங்கல்
கிடைத்த தொல்பொருட்கள் - பெருங்கல்
பண்பாட்டுக் காலம் - பெருங்கற்காலம்
கண்டறிந்த நிறுவனம்/நபர் -

மத்தியத் தொல்லியல் துறை

விளக்கம் -

பாறையின் அடிப்பகுதியில் கி.பி. 5-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு உள்ளது. இதில், ""பொரும் பொகழ் செக்கந்தி தாயியறு செக்கந்தண்ணி செயிவித்த பள்ளி'' எனப் பொறிக்கப்பட்டுள்ளது. இதற்கான பொருள் பெரும்புகை கிராமத்தைச் சேர்ந்த புகழ்பெற்ற செக்கந்தண்ணி என்ற பெண் இந்தக் குகையில் தங்கியிருந்து ஆகார தானம், கல்வி தானம், மருத்துவ தானம், அடைக்கல தானம் ஆகியவற்றை மக்களுக்கு செய்து வந்ததாகத் தெரிவிக்கிறது. மலைப்பள்ளி எனப்படும் இந்தப் பகுதியில் முனிவர்களுக்கு சேவை செய்து படுக்கைகளை அமைத்துள்ளனர்.

ஒளிப்படம்எடுத்தவர் - மத்தியத் தொல்லியல் துறை
ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர் - தமிழ் இணையக் கல்விக்கழகம்
சுருக்கம் -

செஞ்சியை அடுத்த நெகனூர்பட்டி கிராமத்தில் விவசாய நிலங்களுக்கு நடுவே புறம்போக்கு நிலத்தில் சமண முனிவர்கள் வாழ்ந்ததற்கு அடையாளமாக சிறு குகை உள்ளது. இந்த குன்றை சுற்றி, ஒன்றன்மீது ஒன்றாக அடுக்கப்பட்ட பாறைகளாலான அடுக்கம்பாறை என்ற குன்றும் உள்ளது.