அத்திப்பாளையம்

அமைவிடம் - அத்திப்பாளையம்
ஊர் - அத்திப்பாளையம்
மாவட்டம் - கோயம்புத்தூர்
வகை - கற்திட்டை
கிடைத்த தொல்பொருட்கள் - கற்திட்டை, கல்வட்டம்
பண்பாட்டுக் காலம் - பெருங்கற்காலம்
கண்டறியப்பட்ட காலம் - பொ.ஆ.2018
விளக்கம் -

கோயம்புத்தூரில் உள்ள அத்திப்பாளையம் என்னும் ஊரில் பெருங்கற்காலத்தைச் சேர்ந்த கற்தி்ட்டை காணப்படுகின்றது. பொதுவாக கொங்குமண்டலம் மலைகள் சூழ்ந்த பகுதியாகும். எனவே இப்பகுதியில் கல்லால் அமைக்கப்பட்டுள்ள பெருங்கற்கால ஈமச்சின்னங்களை அதிகம் காணலாம். பொருந்தல், கொடுமணல் ஆகிய பகுதிகள் குறிப்பிடத்தக்கன. அவற்றுள் அத்திப்பாளையம், கோயில்பாளையம் போன்ற ஊர்களில் இத்தகு கற்திட்டைகள் காணப்படுவது குறிப்பிடத்தக்கது. பல கல்திட்டைகள் அழிந்த நிலையில் ஒரே ஒரு கற்திட்டை மட்டும் இங்கு காணப்படுகிறது.

ஒளிப்படம்எடுத்தவர் - தமிழ் இணையக் கல்விக் கழகம்
ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர் - தமிழ் இணையக் கல்விக்கழகம்
சுருக்கம் -

கோவை மாவட்டத்தில் உள்ள அத்திப்பாளையம் ஒரு பெருங்கற்கால ஈமச்சின்னப்பகுதியாகும்.