அரசகுடிப்பட்டி

அமைவிடம் - அரசகுடிப்பட்டி
ஊர் - அரசகுடிப்பட்டி
வட்டம் - இலுப்பூர்
மாவட்டம் - புதுக்கோட்டை
வகை - ஈமச்சின்னம் மற்றும் வாழ்விடப்பகுதி -தாழி, பானையோடுகள்
கிடைத்த தொல்பொருட்கள் - தாழிகளின் வாய்ப்பகுதிகள், கருப்பு சிவப்பு பானையோடுகள்
பண்பாட்டுக் காலம் - பெருங்கற்காலம்
கண்டறியப்பட்ட காலம் - பொ.ஆ.2014
கண்டறிந்த நிறுவனம்/நபர் -

மதுரை கோ.சசிகலா

விளக்கம் -

அரசகுடிப்பட்டிகாளப்பனூரிலிருந்து மேற்கே உள்ளது. இவ்வூர் கண்மாயின் வடக்குப்பகுதியில் ஈமத்தாழிச் சின்னங்கள் அழிந்த நிலையில் காணப்படுகின்றன. மேற்பரப்பில் பலவிடங்களில் புதைக்கப்பட்ட ஈமத்தாழிகளின் வாய்ப்பகுதிகள் காணக்கிடக்கின்றன.

ஒளிப்படம்எடுத்தவர் - மதுரை கோ.சசிகலா
ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர் - தமிழ் இணையக் கல்விக் கழகம்
சுருக்கம் -

விராலிமலையிலிருந்து 4கி.மீ. தொலைவில் தெற்குப்பகுதியில் உள்ள காளப்பனூருக்கு மேற்கே இவ்வூர் 2 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இவ்வூரின் கண்மாய்ப் பகுதியில் பெருங்கற்காலத்தைச் சேர்ந்த ஈமச்சின்னங்களில் ஒன்றான தாழிகள் காணப்படுகின்றன.