அத்திமூர்

அமைவிடம் - அத்திமூர்
ஊர் - அத்திமூர்
வட்டம் - போளூர்
மாவட்டம் - திருவண்ணாமலை
வகை - கல்வட்டம்
கிடைத்த தொல்பொருட்கள் - கற்குவை, கல்வட்டங்கள், முதுமக்கள் தாழி
பண்பாட்டுக் காலம் - பெருங்கற்காலம்
விளக்கம் -

அத்திமூர் கர்னாடககிரி கோட்டைக்குச் செல்லும் வழியில் ஆண்டவர் பாதம் கோயிலுக்கு அடுத்த பகுதியில் பெருங்கற்காலத்தைச் சேர்ந்த ஈமச்சின்னங்களான கற்குவைகளும் கல்பதுக்கைகளும் காணப்படுகின்றன. சுமார் 2800 அடி உயரமுள்ள இம்மலையில் வரலாற்றுக்கு முந்தைய கால மக்கள் வாழ்ந்துள்ளனர். அக்கால மக்கள் இறந்தவர்களை புதைத்து அதன் மீது பெரிய கற்களால் ஆன ஈமச்சின்னங்களை உருவாக்கினர். அவ்வாறு உருவாக்கிய ஈமச்சின்னங்கள் அத்திமூர் கோட்டை பகுதியில் 2 இடங்களில் சுமார் 30 -க்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் காணப்படுகின்றன. இவற்றை இப்பகுதி மக்கள் குள்ள மனிதர்கள் வீடு என்றும், வாலி வீடு என்றும் அழைக்கிறார்கள். ஓரிரு ஈமச்சின்னங்கள் தவிர மற்றவை பெரும்பாலும் சிதைக்கப்பட்டுவிட்டன.

ஒளிப்படம்எடுத்தவர் - திரு.பாலமுருகன்
ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர் - தமிழ் இணையக் கல்விக் கழகம்
சுருக்கம் -

அத்திமூர் பகுதியில் பெருங்கற்கால ஈமச்சின்னங்கள் களஆய்வின் போது கண்டறியப்பட்டன. அவற்றில் கல்வட்டங்கள், கற்குவை எனப்படும் கற்குவியல் ஆகியன குறிப்பிடதக்கன. இத்தகு ஈமச்சின்னங்கள் பெருங்கற்காலத்தின் போது இறந்தவர்களின் நினைவாக அவர்களின் புதைவிடத்தில் அமைக்கப்படுபவையாகும். அத்திமூரில் தற்போது ஓரிரு கல்வட்டங்கள் மற்றவை யாவும் முற்றிலும் அழிந்துவிட்டன.