கோயிலின் பெயர் - மலையடிப்பட்டி சிவன் கோயில்
வேறு பெயர்கள் - ஆலத்தூர் குடைவரைக் கோயில்
அமைவிடம் - சிவன் குடைவரைக்கோயில், மலையடிப்பட்டி-621 307, கீரனூர், புதுக்கோட்டை.
ஊர் - மலையடிப்பட்டி
வட்டம் - கீரனூர்
மாவட்டம் - புதுக்கோட்டை
சமய உட்பிரிவு - திருக்கோயிலில் உள்ள மூலவர் சமய உட்பிரிவு விவரம் (சைவம்/வைணவம்/அம்மன்/முருகன் /கிராமதெய்வம்/சமணம்/பௌத்தம்/இதரவகை) - சைவம்
மூலவர் பெயர் - ஸ்ரீவாசீஸ்வரமுடையார்
காலம் / ஆட்சியாளர் - கி.பி. 9ஆம் நூற்றாண்டு / தந்தி வர்மன், விடேல் விடுகு முத்தரையன் குவாவன் சாத்தன்
கல்வெட்டு / செப்பேடு - பல்லவர் கால கிரந்தக் கல்வெட்டுகள், பாண்டியர், சோழர் தமிழ்க் கல்வெட்டுகள், விஜயநகரர் கல்வெட்டுகள் உள்ளன. இக்குடைவரைக் கோயிலைத் தந்திவர்மன் காலத்தில் கி.பி. 812-இல் விடேல்விடுகு முத்தரையன் குவாவன் சாத்தன் என்பவன் திருவாலந்தூர் மலையில் எடுப்பித்ததாக இங்குள்ள கல்வெட்டு தெரிவிக்கிறது.
சுவரோவியங்கள் - இல்லை
சிற்பங்கள் - கருவறையில் தாய்ப்பாறையில் இலிங்கவடிவில் இறைவன் உள்ளார். அர்த்தமண்டபத்தில் துவாரபாலகர் சிற்பங்கள் உள்ளன. மண்டபச் சுவரில் கருவறைக்கு நேராக சங்கரநாராயணர், துர்க்கை சிற்பத் தொகுதிகள் புடைப்புச் சிற்பங்களாக அமைந்துள்ளன. ஏழுகன்னிகளின் சிற்பத் தொகுதியும் அமைந்துள்ளது.
தலத்தின் சிறப்பு - 1100 ஆண்டுகள் பழமையானது. பல்லவர் காலத்தில் எட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இப்பகுதியினை ஆண்ட முத்தரையர்கள் இக்குடைவரையை எடுப்பித்தனர்.
சுருக்கம் - சிவன் குடைவரைக் கோயில் சிறிய கருவறை மற்றும் அர்த்த மண்டபத்துடன் காணப்படுகின்றது. கருவறையில் இலிங்க வடிவமுள்ளது. முன்மண்டபத்தில் விநாயகர், சங்கரநாராயணர், கொற்றவை, சப்தமாதர்கள் சிற்பங்கள் உள்ளன. இக்குடைவரைக் கோயிலைத் தந்திவர்மன் காலத்தில் கி.பி. 812-இல் விடேல்விடுகு முத்தரையன் குவாவன் சாத்தன் என்பவன் திருவாலந்தூர் மலையில் எடுப்பித்ததாக இங்குள்ள கல்வெட்டு தெரிவிக்கிறது.
கோயிலின் அமைப்பு - குடைவரைக்கோயில் இது. அர்த்தமண்டபத்தையும், முகமண்டபத்தையும் கொண்டுள்ளது. அர்த்தமண்டபத்தில் துவாரபாலகர் சிற்பங்கள் உள்ளன.
பாதுகாக்கும் நிறுவனம் - இந்துசமய அறநிலையத்துறையின் கீழ் வழிபாட்டில் உள்ளது.
அருகில் உள்ள கோவில்கள்/தொல்லியல் சின்னங்கள் - விஷ்ணு குடைவரைக் கோயில், குன்னாண்டார் கோயில்
செல்லும் வழி - புதுக்கோட்டை சென்று அங்கிருந்து கீரனூர் வழியாக மலையடிப்பட்டி செல்லலாம்.
கோவில் திறக்கும் நேரம் - காலை 6.00-12.30 முதல் மாலை 5.00-8.30 வரை
அருகிலுள்ள பேருந்து நிலையம் - கீரனூர், மலையடிப்பட்டி
அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம் - தஞ்சாவூர்
அருகிலுள்ள விமான நிலையம் - மதுரை
தங்கும் வசதி - புதுக்கோட்டை விடுதிகள்
ஒளிப்படம்எடுத்தவர் - காந்திராஜன் க.த.